நடிகர் கமல் நடிப்பில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது இதனை அடுத்து நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் கமல்-சங்கர் இருவரும் இந்தியன்2 வில் இணைந்துள்ளனர். இந்தியன் படத்தில் எப்படி நடிகர் கமல் மற்றும் நடிகை சுகன்யா ஆகிய இருவருடைய காட்சிகள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றதோ அந்த அளவிற்கு இந்தியன் 2 வில் நடிகை காஜல் அகர்வால் காட்சிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை உள்ளது என்று ப்டக்குழு தெரிவிக்கின்றனர்.
பிரம்மாண்டம் என்ற பெயருக்கு சொந்தக்காரர் என்றால் அது இயக்குநர் சங்கர் தான் படத்தில் நடிகர் கமல் மற்றும் காஜல் அகர்வாலின் எந்தவொரு லுக்கும் எக்காரணத்தைக் கொண்டும் வெளியே தெரியக்கூடாது என்று முடிவு செய்துள்ளார். இதனால் எக்காரணத்தை கொண்டும் மொபைல் போன் யாருக்கும் அரங்கினுள் அனுமதி கிடையாது அதை கொண்டு வரக்கூடாது என்ற உத்தரவையும் படக்குழுவினருக்குப் பிறப்பித்துள்ளார்.
படத்தில் நடிகர் கமல் நடிகை காஜல் அகர்வால் ஆகிய இருவரின் காட்சிகளின் லுக் ஆனது பார்வையாளர்களுக்குப் பிரமிப்பை உண்டாக்கின்ற வகையில் இயக்குநர் வடிவமைத்து உள்ளார் என்கிறது படக்குழு.படம் தொடர்ந்து அக்டோபர் மாதம் வரை நடைபெறவுள்ளதும் தெளிவாகி உள்ளது.படத்திற்கான கிராபிக்ஸ் பணிகள் எல்லாம் தற்பொழுதே பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படம் 2021 பொங்கல் வெளியீடாக திரைக்கு வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…