கழிவறையில் குழந்தை பெற்று ஜன்னல் வழியாக தூக்கி வீசிய இந்திய பெண் – அமெரிக்காவில் அதிர்ச்சி!

கழிவறையில் குழந்தை பெற்று ஜன்னல் வழியாக தூக்கி வீசிய இந்திய பெண், அமெரிக்காவில் நடந்துள்ள அதிர்ச்சி சம்பவம்.
அமெரிக்காவில் நியூயார்க் மாநிலத்தில் உள்ள குயின்ஸ் எனும் நகரத்தில் 23 வயதான இந்தியாவை சேர்ந்த இளம்பெண் சபீதா துக்ராம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது நியூயார்க்கில் ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில் பணி புரியக்கூடிய சக ஊழியர்களுடன் இவர் உல்லாசமாக இருந்ததால், இவர் கற்பமாகியுள்ளது, இது இவரது பெற்றோர்களுக்கும் தெரிந்துள்ளது. இந்நிலையில் இவர்தான் வசித்து வரக்கூடிய வீட்டில் உள்ள பாத்ரூமில் தனக்குதானே பிரசவம் பார்த்துள்ளார். கத்தரிக்கோலால் தொப்புள் கொடியை அறுத்து அதன் பின் குழந்தையை பாத்ரூமின் ஜன்னல் வழியாக தூக்கி வெளியே வீசி உள்ளார்.
குழந்தையின் அழுகுரல் கேட்கிறது என்று அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது ஐந்தடி உயரத்தில் இருந்து இந்த பச்சிளம் ஆண் குழந்தை ஏறியப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது, அங்கு விரைந்த போலீசார் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக குழந்தையை பெற்ற தாய் சபீதாவிடம் விசாரித்த பொழுது, இந்த குழந்தை எப்படி பிறந்தது என்று எனக்கு தெரியாது, திடீரென என்னுடைய வயிற்றிலிருந்து வெளியே வந்து விட்டது, எனவே நான் என்ன செய்வதென்று தெரியாமல் ஜன்னல் வழியாக வீசிவிட்டேன் என அசால்டாக பதிலளித்துள்ளார். உடனடியாக அவரை கைது செய்த போலீசார் 50,000 டாலர் பிணை தொகையாக வாங்கி அதன்பின் அவரை விடுவித்தனர். இந்நிலையில் சபீதா மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025
விஜயலட்சுமி வழக்கில் கிழிக்கப்பட்ட போலீஸ் சம்மன்? களோபரமான சீமான் வீடு!
February 27, 2025