லண்டன் நகரத்தில் இந்திய நாட்டை சேர்ந்த தாய் ஒருவர் அவரது மகளை 15 முறை குத்தி கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டை சேர்ந்த சுதா-சிவானந்தன் தம்பதிக்கு 2006 ஆம் ஆண்டு திருமணம் முடிந்து லண்டனில் வசித்து வருகிறன்றனர். இவர்களுக்கு சாயாகி என்ற பெண் குழந்தை உள்ளது. மேலும், மூவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், உலகத்தையே உலுக்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிலிருந்து, இயல்பு வாழ்க்கையை எதிர்பார்த்து காத்திருந்துள்ளார் சுதா.
இந்நிலையில், கொரோனா தொற்று முடிவடையாத நிலையிலும், நாளுக்கு நாள் லண்டன் நகரத்தில் தொற்று அதிகரிப்பதையும் பார்த்து மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். இதனால் இவருக்கு தலைவலி, உடல்வலி போன்றவை ஏற்பட்டுள்ளது. உடனே கணவரும் இவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்துள்ளார். ஆனாலும், இவரது உடல் பாதிப்பு குறைவில்லை. இப்படியே நாள் போக, இவருக்கு மன ரீதியில் பல குழப்பங்கள் தோன்றியுள்ளது. தீராத நோய் ஏதும் ஏற்பட்டுள்ளது போல் நினைத்துள்ளார்.
கொலை சம்பவத்திற்கு முதல்நாள் கணவரிடம் பேசியிருக்கிறார். நான் இல்லை என்றால் குழந்தையை பார்த்துக்கொள்வீர்களா? என்று, மேலும் மறுநாள் அலுவலகத்திற்கு விடுப்பு எடுக்குமாறும் கோரியுள்ளார். ஆனால், இவற்றை சாதாரணமாக கருதிய கணவர் எப்போதும் போல அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
வீட்டில் சுதாவும் சாயாகியும் தனியாக இருந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட மனக்குழப்பத்தால், தான் இறந்த பிறகு குழந்தையை கவனித்துக்கொள்ள யாரும் இருக்கமாட்டார்கள் என்று நினைத்து குழந்தையின் கழுத்தில் 15 முறை கத்தியால் குத்தி கொன்றுள்ளார். பின்னர், அவரது வயிற்றிலும் குத்தியிருக்கிறார். குழந்தையின் சத்தம் கேட்டு வந்த பக்கத்துக்கு வீட்டு நபர், இருவரும் ரத்தத்தில் மிதப்பதை பார்த்திருக்கிறார். பின்னர், காவல்துறை மற்றும் சுதாவின் கணவர் சிவானந்தத்திற்கும் தகவலை தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட இருவரில் சாயாகி இறந்துள்ளார். குணமடைந்த பிறகு, சுதாவை கொலை வழக்கில் விசாரித்துள்ளனர். அப்போது சுதாவின் மருத்துவர், நீதிபதியிடம் சில காலமாகவே அதீத மன வேதனையில் சுதா இருந்ததாக தெரிவித்துள்ளார். அதன் காரணமாகவே இந்த கொலை ஏற்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் சுதாவை மனநல சட்ட அடிப்படையில் சிகிச்சைக்கு அனுப்பியுள்ளனர் நீதிபதிகள்.
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…