சூடான் நாட்டிற்குள் இந்திய பயணிகள் வருவதற்கு தடை விதிப்பு!

Default Image

கொரோனா பரவலின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் சூடான் நாட்டிற்கு இந்திய பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. அதிலும் கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக தற்பொழுது லட்சக்கணக்கானோர் தினமும் புதிதாக பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகம் காணப்படுவதால் மற்ற பிற நாடுகள் தங்கள் நாடுகளில் இந்திய பயணிகள் வருவதற்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

இதையடுத்து அந்த வகையில் வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டிற்குள்ளும் இந்திய பயணிகள் வருவதற்கு தடை விதித்துள்ளது. இதுவரை சூடானில் 34 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சூடானிலும் கொரோனா பரவலின் தாக்கம் அதிக அளவில் காணப்படுவதால் அங்கு ஊரடங்குகள் மற்றும் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூட கூடிய பொது இடங்களும் அங்கு மூடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்