பாகிஸ்தானில் 55 வருடத்துக்குப் பிறகு விளையாட உள்ள இந்திய டென்னிஸ் அணி!
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத் நகரில் வருகின்ற செப்டம்பர் 14,15 ஆகிய இரு நாள்கள் நடைபெற உள்ளது.இந்த போட்டியில் இந்திய அணி கலந்து கொள்ளுமா சந்தேகம் இருந்த நிலையில் இந்திய அணி பாகிஸ்தான் செல்வதை இந்திய டென்னிஸ் சங்க பொதுச்செயலாளர் ஹிரோன்மோய் சட்டர்ஜி உறுதி செய்தார்.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் என்பது இந்தியா -பாகிஸ்தான் இடையே நடக்கும் போட்டி அல்ல டென்னிஸ் உலகக்கோப்பை என்பதால் பாகிஸ்தான் சென்று விளையாட முடிவு செய்து உள்ளோம்.இந்த போட்டி தொடர்பாக அரசிடம் எதும் பேசவில்லை என ஹிரோன்மோய் சட்டர்ஜி கூறினார்.
மேலும் சட்டர்ஜி கூறுகையில் ,பாகிஸ்தான் ஹாக்கி அணி சமீபத்தில் இந்தியா வந்து விளையாடினார்கள். இப்போது நாங்கள் போகிறோம் என கூறினார்.ஆறு வீரர்கள் கொண்ட அணியும் ,உதவியாளர்கள் ,பயிற்சியாளர் மற்றும் நான் செல்ல உள்ளதாகவும் விரைவில் விசா விண்ணப்பிப்பதாகவும் ,இதற்கான அணியை இன்னும் தேர்வு செய்ய வில்லை என கூறினார்.இதன் மூலம் இந்தியா கடந்த 55 ஆண்டுகளில் முதல் முறையாக பாகிஸ்தான் செல்கிறது.
இந்தியா கடைசியாக 2006 இல் மும்பையின் பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்த டேவிஸ் கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.