முதல் முறையாக சுழல் பந்து வீச்சாளர்களிடம் விக்கெட்டை பறிகொடுத்த இந்திய அணி !
நேற்றைய போட்டியில் இந்திய அணியும் , ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இப்போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 224 ரன்கள் எடுத்தது.பின்னர் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 213 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து.
இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணி விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு போட்டியில் கூட சூழல் பந்து வீச்சாளர்களிடம் இந்திய அணி வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்தது இல்லை.
ஆனால் நேற்று நடத்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் ஆப்கானிஸ்தான் அணியின் சூழல் பந்து வீச்சாளர்களிடம் 5 விக்கெட்டை பறி கொடுத்தனர்.நேற்றைய போட்டியில் இந்திய வெற்றி பெற்றதன் மூலம் புள்ளி பட்டியலில் 9 புள்ளிகளை பெற்று இந்திய அணி மூன்றாம் இடத்திற்கு முன்னேறியது.
SA – 0
Aus – 0
Pak – 0
Afg – 5*