உலகக்கோப்பையில் 4 கீப்பர்களை கொண்டு கெத்து காட்டும் இந்திய அணி !
உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.இந்த உலகக்கோப்பை மொத்தமாக 10 அணிகள் விளையாடி வருகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு போட்டியில் மோத வேண்டும். அதன்படி இந்திய அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது.
ஒரு போட்டி மழை காரணமாக ரத்தானது. இந்நிலையில் இந்திய அணி இரண்டாவது போட்டியின் போது ஆஸ்திரேலியா அணி உடன் மோதியது.அப்போட்டியில் தவான் அபாரமாக சதமடித்து சாதனை புரிந்தார்.
மேலும் அப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் நாதன் கோல்டர் வீசிய பந்தில் தவானுக்கு இடது கை பெரும் விரலில் பலத்த காயம் ஏற்பட்டது.அதனால் அவருக்கு பதிலாக அப்போட்டியில் பதில் ஜடேஜா களமிறங்கினர்.
காயம் காரணமாக ஷிகர் தவன் இரண்டு போட்டிகளில் விளையாடமல் இருந்தார். ஆனால் தற்போது அவருக்கு பதிலாக ரிஷாப் பண்ட் அவர்கள் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்திய அணியில் 4 விக்கெட் கீப்பர்கள் பெற்றுள்ளது.
இந்திய அணியில் இடம் பெற்றுள்ள 15 வீரர்களில் தோனி, தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் ,கே.எல் ராகுல் ஆகியோர் விக்கெட் கீப்பராகவும் வளம் வருகின்றனர். இந்நிலையில் உலக கோப்பையில் 4 விக்கெட் கீப்பர்களைக் கொண்ட ஒரே என்ற பெருமையை பெற்று உள்ளது.
டோனி (விக்கெட் கீப்பர்)
தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்)
கே .எல் ராகுல் (விக்கெட் கீப்பர்)
ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்)