வெஸ்ட் இண்டீஸை வதம் செய்த இந்திய அணி! இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றம் !
இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியும் ,வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதியது . இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டி டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல், ரோகித் சர்மா இருவரும் இறங்கினர் . ஆட்டம் தொடக்கத்திலிருந்து நிதானமாக விளையாடிய இருவரும் பொறுமையாக ரன்களை சேர்த்தனர். அந்நிலையில் 6 -வது ஓவரில் ரோகித் சர்மா 23 ரன்னில் வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் கோலி , கே.எல் ராகுல் இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடி வந்த கே.எல் ராகுல் 48 ரன்னில் அவுட்டானார்.
அதன் பின்னர் களமிறங்கிய விஜய் சங்கர், கேதர் ஜாதவ் இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார். நிதானமாகவும் ,சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணியின் கேப்டன் கோலி 72 ரன்கள் குவித்தார்.
மத்தியில் இறங்கிய டோனி ,ஹார்திக் பாண்டிய இருவரும் சீராக விளையாடி ரன்களை சேர்ந்தனர்.இறுதியாக டோனி அரைசதம் எடுக்க, இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 268 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேமர் ரூஜ் 3 விக்கெட்டையும், ஜாக்சன் போல்டர் தலா2 விக்கெட்டும் வீழ்த்தினார்.
269 என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்ல் ,
சுனில் அம்ப்ரிஸ் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலிருந்து இருவருமே தடுமாறிய விளையாடினர்.
கிறிஸ் கெய்ல் 5-வது ஓவரில் 6 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ஷாய் ஹோப் 5 ரன்களுடன் அவுட் ஆனார்.பின்னர் நிதானமாக விளையாடி கொண்டிருந்த சுனில் அம்ப்ரிஸ் 31 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்ததாக இறங்கிய நிக்கோலஸ் பூரன், ஷிம்ரான் ஹெட்மியர் இருவரும் கூட்டணியில் அணியின் ரன்கள் சற்று உயர்ந்தது.சிறப்பாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்விடம் தனது விக்கெட்டை 28 ரன்னில் கொடுத்தார்.
பிறகு களமிறங்கிய அடுத்தடுத்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவரில்143 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்து 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.