ஆஸ்திரேலிய மாஸ்டர் செஃப் பட்டத்தை இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜஸ்டின் நாராயண் வெற்றிபெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜஸ்டின் நாராயண் வென்றுள்ளார்.
உலக அளவில் மிகப்புகழ் பெற்ற சமையல் நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவில் நடக்கும் மாஸ்டர் செஃப் டிராபி நிகழ்ச்சி. தற்போது இதன் பதிமூன்றாவது சீசனின் இறுதி போட்டி நேற்று ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்த இறுதி போட்டிக்கு மூன்று பேர் தேர்வாகியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜஸ்டின் நாராயண், ஆஸ்திரேலியாவை சேர்ந்த பீட் கேம்பெல், வங்கதேச வம்சாவளியை சேர்ந்த கிஷ்வர் சௌத்ரி ஆகிய மூன்று பேரும் பரபரப்பான இறுதிப்போட்டிக்கு தேர்வாகி கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், ஆஸ்ரேலியாவில் நடக்கும் பதிமூன்றாவது சீசனின் மாஸ்டர் செஃப் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜஸ்டின் நாராயண் என்று அறிவித்துள்ளனர். இந்த வெற்றியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், ஜஸ்டின் நாராயனுக்கு பலரும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
இருபத்தேழு வயதாகும் ஜஸ்டின் நாராயனுக்கு மாஸ்டர் செஃப் சீசன் 13 ட்ராபி வழங்கப்பட்டது. மேலும், முதல் பரிசின் பரிசுத்தொகையான இந்திய மதிப்பின் படி, ரூ.1.86 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருச்சி: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளிவந்துள்ள "விடுதலை 2" இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல…
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
கோவை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில்…
நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.…
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…