சீனாவில் இந்திய செய்தித்தாள்கள் மற்றும் இணையதளங்களுக்கு தடை!
சீனாவில் இந்திய செய்தித்தாள்கள் மற்றும் இணையதளங்களுக்கு தடை.
கடந்த சில நாட்காளாகவே சீனா – இந்தியா இடையே கடுமையான பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. சீன செய்தித்தாள்கள் மற்றும் இணையதளங்களை அணுகுதற்கு, இந்தியாவில் தடையின்றி உள்ள நிலையில், வி.பி.என் எனப்படும் வர்சுவல் ப்ரைவேட் நெட்வர்க்கைக் கொண்டுள்ள இந்திய ஊடக இணையதளங்களை மட்டுமே சீன மக்கள் அணுக முடியும்.
இதனையடுத்து, ஐ.பி. டிவி மூலம், இந்திய தொலைக்காட்சி சேனல்களைக் காணலாம். கடந்த இரண்டு நாட்களாக, சீனாவில், டெஸ்க்டாப் கணிணிகளிலும் ஐ-ஃபோன்களிலும் எக்ஸ்பிரஸ் விபிஎன் பணிபுரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டிக் டாக் செயலி உட்பட 59 சீன பயன்பாடுகளுக்கு, இந்திய அரசாங்கம் தற்போது தடை விதித்துள்ளது. எனினும், இந்திய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு முன்னரே சீனா இந்திய ஊட்கங்களை தனது நாட்டில் தடை செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.