முக கவசம் அணிய சொல்லிய சிங்கப்பூர் நபரை தாக்கிய இந்தியருக்கு 7 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓரிரு நாடுகளில் மட்டும் தற்போது முகக்கவசம் அணிவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிங்கப்பூரில் கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூரில் வசித்து வரும் சந்திரசேகர் என்பவர் முக கவசம் சரியாக அணியவில்லை என்பதற்காக தன்னார்வலர் ஒருவர், அவரிடம் முகக்கவசத்தை சரியாக அணியுமாறு கூறியுள்ளார். இந்நிலையில் தன்னை முகக்கவசம் அணிய சொல்லிய தன்னார்வலரை அந்த நபர் கடுமையாக தாக்கியுள்ளார். இதனை அடுத்து இது தொடர்பாக இந்திய நபர் மீது புகாரளிக்கப்பட்ட நிலையில், தன்னார்வலரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட இந்தியர் சந்திரசேகர் என்பவருக்கு ஏழு வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…