அமெரிக்காவில் 22 கோடி மோசடி செய்த வழக்கில் இந்தியருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை!

Default Image

அமெரிக்காவில் வசித்து வரக்கூடிய இந்தியர் கால்சென்டர் நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரில் வசித்து வரக்கூடிய 34 வயதுடைய இந்தியர் தான் ஹிமான்சு. இவர் நடத்தி வர கூடிய கால் சென்டர் மூலமாக கம்பியூட்டர்களை சரி செய்து தருவதாக அமெரிக்கர்களை குறிவைத்து 5 ஆண்டுகளுக்கு மேலாக இவர் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனையடுத்து அமெரிக்காவை சேர்ந்த பலர் இவரது விளம்பரத்தை கண்டு தங்கள் கம்ப்யூட்டரில் பாதிப்பு உள்ளது சரி செய்து தருமாறு கால்சென்டர் மூலமாக அழைக்கும் பொழுது, இவர் அந்த வாடிக்கையாளரிடம் கம்ப்யூட்டரின் பிரச்சனையை சரி செய்வதாக கூறி பெரிய அளவு தொகையை வசூலித்து விட்டு கம்ப்யூட்டரை சரி செய்து விட்டதாக பொய் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இவ்வாறு அவர் இந்திய மதிப்பில் இதுவரை 22 கோடி வரை மோசடி செய்துள்ளாராம். இதனால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் நடத்திய விசாரணையில் ஹிமான்சு செய்துள்ள மோசடி அம்பலமானது. இதனையடுத்து அவர் கடந்த ஆண்டு போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.

இவர் தனது குற்றத்தை கடந்த டிசம்பர் மாதமே ஒப்புக்கொண்ட நிலையில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருந்த ஹிமான்சு நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹிமான்சுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளனர். இந்த மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்த பின்பு அவர் மீண்டும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்