“நான் அதிபரானால் இந்தியாவின் நட்புறவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்”- ஜோ பைடன்!
ஜோ பைடன், அமெரிக்க அதிபரானால், இந்திய நாட்டின் நட்புறவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவிவருகிறது. ஆனால் அங்கு கொரோனாவைப் பற்றி பேசுவதை விட, நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலை பற்றி பேசும் பேச்சுக்களே அதிகளவில் உள்ளது. இதன்காரணமாக, அங்கு தேர்தல் பணிகள், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார்.
அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் 90 -க்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரகள் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன், “தான் அமெரிக்க நாட்டின் அதிபரானால், இந்திய நாட்டின் நட்புறவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.