கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால், பல்வேறு மாநிலங்களில் வார இறுதி மற்றும் இரவு ஊரடங்கு அறிவித்துள்ளனர். டெல்லி, மகாராஷ்டிரா போன்ற சில மாநிலங்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச விமானப் பயணம் மீண்டும் மூடப்படும் என்ற அச்சம் மீண்டும் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் திட்டமிடப்பட்ட அனைத்து சர்வதேச விமானங்களையும் நிறுத்துவதாக இந்தியா அறிவித்தது. அதன் பின்னர், வழக்கமான இயங்கும் விமானங்கள் தொடங்கப்படவில்லை. பின் மிஷன் வந்தே பாரத்தின் கீழ் இந்தியா விமானத்தை இயக்கியது. சர்வதேச பயணத்தை எளிதாக்குவதற்காக பல்வேறு நாடுகளுடன் இருதரப்பு ஒப்பந்தங்களையும் செய்தது.
இருப்பினும், இங்கிலாந்து, ஹாங்காங், கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவில் இருந்து விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. நீங்கள் ஒரு சர்வதேச விமானத்தில் பயணம் செய்ய விரும்பினால் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நாடுகளை பற்றி பார்க்கிறோம்.
ஹாங்காங்:
ஹாங்காங், இந்தியா இடையே விமான சேவைக்கு எந்த ஒப்பந்தம் இல்லை என்றாலும், சிக்கித் தவிக்கும் இந்தியர்களை திருப்பி அனுப்புவதற்காக மிஷன் வந்தே பாரத்தின் ஒரு பகுதியாக பல விமானங்கள் இயக்கப்பட்டன. இருப்பினும், ஹாங்காங் இந்தியாவுடன் இணைக்கும் அனைத்து விமானங்களையும் மே 3 -ஆம் வரை நிறுத்தி வைத்துள்ளது. இந்த மாதத்தில் இரண்டு விமானங்களின் 50 பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஹாங்காங் அரசு இந்த முடிவு செய்துள்ளது.
இங்கிலாந்து:
முன்னதாக கொரோனா காரணமாக இங்கிலாந்தில் இருந்து விமானங்களுக்கு தடை விதிக்க அறிவித்திருந்தாலும், இப்போது அதிகரித்து வரும் கொரோனா காரணமாக 7 இந்தியர்களுக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் இருந்து விமானங்களுக்கு தடை விதித்து இங்கிலாந்து அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஏர் இந்தியா ஏப்ரல் 30 வரை இங்கிலாந்திலிருந்து அனைத்து விமானங்களையும் நிறுத்தி வைத்துள்ளது.
கனடா:
கொரோனா அதிகரித்து வருவதால் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து அனைத்து விமானங்களை 30 நாட்களுக்கு கனடா தடை செய்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து சரக்கு விமானங்கள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான்:
நமது அண்டை நாடும் இந்தியாவில் இருந்து வரும் இரண்டு வாரவிமானிகளை தடை செய்ய முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானின் தேசிய கட்டளை மற்றும் செயல்பாட்டு மையம் (என்.சி.ஓ.சி) வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டு வார பயணத்திற்கு தடை விதிக்க முடிவு எடுத்துள்ளது. இந்தியாவில் இருந்து விமானம் மற்றும் நில வழிகள் வழியாக வரும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து:
ஏப்ரல் 11 முதல் 28 வரை இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தற்காலிக தடையை அறிவித்த முதல் நாடுகளில் நியூசிலாந்து ஒன்றாகும். புதிதாக 23 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டன. அதில் 17 பேர் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்பதால் பயண தடை விதிக்கப்பட்டது.
இந்தியா ஆரம்பத்தில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் கடந்த ஆண்டு பயணம் செய்ய ஒப்பந்தம். அதன் பின்னர், மொத்தம் 27 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தங்களை செய்துள்ளது. அதன்படி, ஆப்கானிஸ்தான்,பஹ்ரைன், பங்களாதேஷ், பூட்டான், கனடா, எத்தியோப்பியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஈராக், ஜப்பான், கென்யா, குவைத், மாலத்தீவுகள், நேபாளம், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமான், கத்தார், ரஷ்யா, ருவாண்டா, தான்சானியா, உக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து செல்லலாம்.
சில நாடுகள் இப்போது இந்தியாவிலிருந்து சுற்றுலா விசாவுடன் பயணிகளை அனுமதிக்கின்றன. அவை
இருப்பினும், சுற்றுலா விசாவை நாடு அனுமதிக்கவில்லை என்றால் இந்தியர்கள் இந்த நாடுகளுக்கு செல்ல முடியாது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…