கொரோனா பரவல் காரணமாக கனடாவில் இந்திய விமானங்களுக்கு தடை…!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் பயணிகள் கனடா செல்ல அந்நாட்டு அரசு 30 நாட்கள் தற்காலிக தடை விதித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் பயணிகள் கனடா செல்ல அந்நாட்டு அரசு 30 நாட்கள் தற்காலிக தடை விதித்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் பயணிகளுக்கு தொற்று உறுதியாகி இருப்பது அதிகரித்து வரும் நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் பயணிகள் விமானத்துக்கு கனடா போக்குவரத்து அமைச்சகம் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து கனடா போக்குவரத்து துறை மந்திரி ஓமர் அல்காப்ரா கூறுகையில், இந்தியாவில் இருந்து கனடா வரும் விமான பயணிகளுக்கு அதிக அளவில் கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்படுகிறது. இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமானம் 30 நாட்கள் தற்காலிகமாக தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
விஜயலட்சுமி வழக்கில் கிழிக்கப்பட்ட போலீஸ் சம்மன்? களோபரமான சீமான் வீடு!
February 27, 2025
நாளை சென்னை உட்பட 11 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் கணிப்பு!
February 27, 2025