ஜப்பானில் நிலநடுக்கம்.! இந்திய தூதரகம் வெளியிட்ட அவசரகால எண்கள்.!
இன்று 2024 ஆம் ஆண்டின் முதல் நாளிலேயே ஜப்பானில் 30க்கும் மேற்பட்ட நகரங்களில் 5.5 என்ற ரிக்டர் அளவு முதல் 7.6 ரிக்டர் அளவு வரை சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானின் கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
இஷிகாவா, நைகட்டா, டொயாமா உள்ளிட்ட கடற்கரையோர நகர மக்கள் சுனாமி எச்சரிக்கை காரணமாக அங்கு வசித்து வந்த மக்கள் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டனர். இந்த சூழலில், ஜப்பானில் கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் கடல் நீர் ஊருக்குள் வர தொடங்கியது என பல்வேறு வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில், ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகம், அங்குள்ள இந்தியர்களுக்கு உதவும்படி அவசர கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது . மேலும் உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி
- +81-80-3930-1715 (யாகூப் டோப்னோ)
- +81-70-1492-0049 (அஜய் சேத்தி)
- +81-80-3214-4734 (டி.என். பர்ன்வால்)
- +81-80-6229-5382 (எஸ். பட்டாச்சார்யா)
- +81-80-3214-4722 (விவேக் ரதீ)
- sscons.tokyo@mea.gov.in offfseco.tokyo@mea.gov.in
மேற்கண் உதவி எண்கள் மற்றும் மின்னஞ்சலை தொடர்பு கொண்டு தூதரக உதவிகளை நாடலாம் என ஜப்பானில் உள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.