கொரோனாவால் இங்கிலாந்தில் இந்திய டாக்டர் உயிரிழப்பு.!

Default Image

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஜிதேந்திர குமார் ரத்தோட் இங்கிலாந்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் வேலை செய்து வந்தார்.அவருக்கு கொரோனா வைரஸ் உறுதியானதை தொடர்ந்து கர்டிப் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதையெடுத்து ஜிதேந்திர குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் இந்தியாவில் மருத்துவ படிப்பை முடித்தவர். 1995-ம் ஆண்டு இங்கிலாந்தில் வேல்ஸ் பல் கலைக்கழக ஆஸ்பத்திரியில் இதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியை தொடங்கினார்.

பிறகு சில ஆண்டுகள் வேறு நாட்டில் வேலை செய்தார். இதையடுத்து மீண்டும் 2006-ம் ஆண்டு வேல்ஸ் மருத்துவமனைக்கு திரும்பினார். அவரது மறைவுக்கு வேல்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனை இரங்கல் தெரிவித்துள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்