வேற மாறி… தளபதி நடனத்தை பார்த்து அசந்து போன இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின்..!
மாஸ்டர் படத்திலுள்ள வாத்தி கம்மிங் பாடலில் தளபதி நடனத்தை பார்த்து இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் தனது ட்வீட்டர் பக்கத்தில் வேற மாறி என்று கூறியுள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.மேலும் இந்த படத்தினை வீட்டிலிருந்தே பார்க்கும் வகையில் நேற்று முதல் ஓடிடி தளமான அமேசான் பிரேமில் வெளியாகியுள்ளது .
வழக்கமாக திரையரங்குகளில் வெளியான படத்தினை இரண்டு மாதங்களுக்கு பின் தான் ஓடிடியில் வெளியிடுவார்கள். ஆனால் மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியாகிய 2 வாரங்களிலேயே அமேசான் பிரேமில் வெளியானது.
இதனை ரசிகர்கள் மட்டும் பார்த்து வராமல் சினிமா பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் தனது ட்வீட்டர் பக்கத்தில் “வாத்தி கம்மிங் ” பாடலில் விஜய் ஆடும் வீடியோவை வெளியிட்டு வேற மாறி என்று கூறியுள்ளார்.
Vera mari ????????????????????!! @anirudhofficial @actorvijay pic.twitter.com/hjr8xEnjAD
— Ashwin ???????? (@ashwinravi99) January 29, 2021