துபாயில் ஒரு இந்திய தொழிலதிபர் வீட்டில் கணவர் மற்றும் மனைவியை கொடூரமாக கொலை செய்த மரம நபர்.
இந்த சம்பவத்தில் உட்பட்ட தம்பதியின் மகள் துபாய் போலீஸ் புகார் அளித்த பின்னர் துபாய் காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் பிரிகேடியர் ஜமால் அல் ஜல்லாஃப் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் தடயவியல் அதிகாரிகள் தொழிலதிபர் வீட்டுக்கு சென்றனர். அங்கு ஒரு நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த கணவன் மற்றும் மனைவி கொல்லப்பட்டதை அறிந்தார் ஆனால் அவர்களில் 18 மற்றும் 13 வயதுடைய இரு மகள்களால் தப்பி பிழைத்தனர் என்று பொலிஸார் தரப்பில் கூறப்படுகிறது.
காவல்துறையினரின் கூறுகையில், ஜூன் 18ம் தேதி கொல்லப்பட்ட குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தபோது சந்தேக நபர் வீட்டுக்குள் நுழைந்து ரூ. 41,229 அடங்கிய பணப்பையை எடுத்துக்கொண்டு படுக்கையறைக்குள் சென்று மேலும் அதிகம் மதிப்புள்ள பொருட்களை திருட முயற்சித்துள்ளார்.
வீட்டின் சொந்தக்காரர் எழுந்தபோது திருட வந்த மர்ம நபர் அவரை குத்தினார் சத்தத்தை கேட்டு மனைவி எழுந்ததும் திருடன் மனைவியும் குத்தினார் கடைசியில் இருவரையும் குத்தி கொலை செய்துவிட்டார். இதனிடைய அவர்களுடைய 18 வயது மகள் எழுந்து பெற்றோரை இரத்தக் வெள்ளத்தில் பார்த்தபோது தாக்குதல் நடத்தியவர் மகளின் கழுத்தில் குத்தி தப்பிச் சென்றார் என்று பிரிக் அல் ஜலாஃப் கூறினார். மகளுக்கு லேசான காயம் அடைந்ததால் அவர் துபாய் போலீஸை அணுக முடிந்தது.
பின் தீவிர விசாரணையில் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் கத்தியைக் கண்ட அதிகாரிகள் அருகில் தங்கியிருந்த சந்தேக நபர்களை கண்டுபிடித்தனர். துபாய் காவல்துறையின் குற்றவியல் புலனாய்வு இயக்குனர் கர்னல் ஆதில் அல் ஜோக்கரின் உதவியால் கொலை செய்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் அவர் வீட்டிற்குள் நுழைய திட்டமிட்டதாகவும் கூறினார்.
ஒப்புக்கொண்ட கொலையாளி கூறுகையில் அவர் ஒரு வருடத்திற்கு முன்பு வீட்டில் பராமரிப்புப் பணிகளைச் செய்ததாகவும் மேஜையில் அதிகளவில் பணத்தை பார்த்ததாகவும் இதற்காகத்தான் வீட்டிற்குள் நுழைவதற்கு அவரைத் தூண்டியது என்று “கோல் அல் ஜோக்கர்” கூறினார். மேலும் வீட்டிலிருந்து சில நகைகளும் திருடப்பட்டுள்ளது ஆனால் அதை மீட்கப்பட்டுள்ளது என்றார்.
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கிறார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர்…
சென்னை : மத்திய அரசு பரந்தூர் பகுதியில் புதியதாக விமான நிலையம் ஒன்றினை அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு…
சென்னை : இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு தற்போது படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக சிம்புவை…
சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது www.tnpsc.gov.in…
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…