துபாய் மசாஜ் சென்டரில் 4 பெண்களால் ஏமாற்றப்பட்ட இந்தியர்!

Default Image

துபாயில் இந்தியர் ஒருவர் மசாஜ் செய்வதற்காக சென்ற இடத்தில் நான்கு பெண்களால் கத்தி முனையில் மிரட்டப்பட்டு பணம் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெண்டர் எனும் துபாய் டேட்டிங் அப்ளிகேஷனில் பெண்கள் மசாஜ் செய்வது போன்ற புகைப்படத்துடன் இந்திய ரூபாய்க்கு நான்காயிரம் மட்டுமே ஆஃபர் கொண்ட ஒரு மசாஜ் இருப்பதாக விளம்பரம் வந்துள்ளது. இந்த விளம்பரத்தை பார்த்த இந்திய இளைஞர், மசாஜ் செண்டர் ஒருவர் எந்த இடத்தில் உள்ளது என்பது குறித்து விளம்பரத்தில் வைத்த தொலைபேசி நம்பருக்கு அழைத்து விசாரித்து அந்த இடத்திற்கு சென்றுள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் தங்களது மசாஜ் சென்டர் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து அவரும் அங்கு செல்ல, அங்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த 4 பெண்கள் இருந்துள்ளனர்.

உள்ளே சென்ற அந்த இளைஞரை, கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி, அவரை தொலைபேசியில் இருந்து தங்களது வங்கி கணக்குக்கு அவரிடம் இருந்த பணத்தை எல்லாம் அனுப்ப வைத்துள்ளனர். அதன்பின் அவரது கிரெடிட் கார்டை எடுத்து அதில் உள்ள பணத்தையும் எடுத்துள்ளனர். அவரது ஐ போனையும் எடுத்துவிட்டு இளைஞருக்கு சரமாரியாக அடி கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து அவர் தனது வங்கி கணக்கில் இருந்து முறைகேடாக பணம் திருடப்பட்டுள்ளதாக வங்கிக்கு தெரிவித்துள்ளதுடன், காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு பெண் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆசையாக மசாஜ் செய்வதற்காக சென்று 55 லட்சம் ரூபாயை இழந்த இந்திய இளைஞர் குறித்து தற்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்