நான்காவது உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமி மாபெரும் சாதனை!

Default Image

நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியும் , ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இப்போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 224 ரன்கள் எடுத்தது.பின்னர் இறங்கிய  ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 213 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து.
இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் கடைசி ஓவரை முகமது ஷமி வீசினார். அந்த ஓவரில் கடைசி 3 பந்துகளில் 3 விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற பெரும் வழிவகுத்தார். இப்போட்டியில் முகமது ஷமி 9.5 ஓவரில் 40 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டை பறித்தார்.
மேலும் உலகக்கோப்பையில் இந்திய அணி பந்து வீச்சாளர்களில் இரண்டாவது முறையாக தொடர்ந்து மூன்று விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்.முதல் முறையாக இந்திய பந்து வீச்சாளர் சேதன் சர்மா 1987 ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் முதல் முறையாக தொடர்ந்து மூன்று விக்கெட்டை வீழ்த்தினர்.அதன் பின்னர் முகமது ஷமி வீழ்த்தி உள்ளார்.
Chetan Sharma vs NZ (1987)
Mohammed Shami vs Afg (2019)*

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS TAMIL
Rohini (13) (1)
TN Weather Update
heavy rain
Mumbai Taj Attack
Southwest Bay of Bengal
75th Constitution Day