வழி தவறி நம் நாட்டு எல்லைக்குள் சிக்கிய சீனர்கள்.! உணவளித்து வழியனுப்பிய நம் ராணுவத்தினர்.!
இந்திய எல்லைக்குள் வழிதவறி நுழைந்த சீனர்களுக்கு உணவு, மருந்தளித்து வழியனுப்பி வைத்துள்ளனர் இந்திய ராணுவத்தினர்.
கடந்த சில மாதங்களாக இந்திய சீன எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்தியா – சீனா இடையே போர் மூளும் அபாயம் கூட ஏற்பட்டு வருகிறது.
இப்படி பதற்றமான சூழல் நிலவும் வேலையிலும் இந்திய இராணுவத்தினர் ஒரு நெகிழ்ச்சியான செயலை செய்துள்ளனர். அதாவது சிக்கிம் மாநிலத்தில் உள்ள சீன எல்லையில் சீனாவை சேர்ந்த பெண் உட்பட 3 பேர் வழிதவறி இந்திய எல்லைக்குள் வந்துவிட்டனர்.
அந்த இடமானது மூச்சு விடுவதற்குக் கூட சிரமமான இருக்கும் வகையில் குறைவான வெப்பநிலை நிலவி வரும் இடமாகும். மிகவும் அபாயகரமான இந்த பகுதியில் இந்தியப் படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வழிதவறி வந்த மூன்று சீனர்களை கண்டுள்ளனர்.
பின்னர் அவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜன், உணவு, மருந்து ஆகியவற்றை கொடுத்து உதவியுள்ளனர். மேலும், அவர்கள் செல்ல வேண்டிய வழியையும் காட்டி வழி அனுப்பி வைத்துள்ளனர். அந்த மூன்று சீனர்களும் இந்தியர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு சென்றுள்ளனர்.