அமெரிக்க அறிவியல் வாரிய உறுப்பினராக இந்திய அமெரிக்கர் நியமனம் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்
அதிபர் ட்ரம்ப், அமெரிக்க அறிவியல் வாரிய உறுப்பினராக இந்திய அமெரிக்கர் சுதர்சன பாபுவை நியமனம் செய்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ், மிக தீவிரமான தாக்குதலை நடத்தி வருகிற நிலையில், இந்த பரபரப்பான சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க அறிவியல் வாரிய உறுப்பினராக இந்திய அமெரிக்கர் சுதர்சனம் பாபு என்பவரை நியமனம் செய்துள்ளார்.
இவர், கடந்த 1986ம் ஆண்டு தமிழகத்தின் கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரியில் பொறியியல் படிப்பும், கடந்த 1988ம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி.யில் முதுநிலை தொழில்நுட்பம் பிரிவிலும் படித்து பட்டம் பெற்றுள்ளார். மேலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. பட்டமும் பெற்றுள்ளார்.
இவருக்கு முன், அரிசோனா பல்கலைக்கழகத்தின் சேதுராமன் பஞ்சநாதன் மற்றும் வெர்மோன்ட் பல்கலைக்கழகத்தின் சுரேஷ் வி. கரிமெல்லா ஆகிய இருவரும் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். சுதர்சனம் பாபு, அமெரிக்க அறிவியல் வாரியத்தின் உறுப்பினரான 3வது இந்திய அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.