ஆப்கானிஸ்தான் காபூலில் இருந்து இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் இன்று காலை 107 இந்தியர்கள் உட்பட 168 பேருடன் கிளம்பியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் அந்நாட்டில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஏற்கனவே காபூல் விமான நிலையத்தில் இருந்து 85 இந்தியர்கள் இந்திய விமானப்படை விமானம் மூலமாக துஷான்பே விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கிருந்து அவர்கள் அனைவரும் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதும் 107 இந்தியர்கள் உட்பட 168 பேருடன் காபூலில் இருந்து இந்திய விமானப்படை விமானம் புறப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். காபூல் விமான நிலையத்தில் காத்திருந்த இந்தியர்கள் 107 பேர் தற்போது இந்திய விமானப்படை சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டு கொண்டுள்ளனர்.
சென்னை : இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்…
மும்பை : எப்போதுமே திறமையான இளம் வீரர்களை எடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களும் வளர்வதற்கு ஒரு காரணத்தை மும்பை…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…