அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவின் ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ் நிலவில் கால் பதிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 18 விண்வெளி வீரர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க அதிகாரி ராஜா சாரி அவர்களும் இடம் பிடித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு நிலவில் தெற்கு பகுதியில் கால் பதிப்பதற்காக அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா தனது ஆர்டெமிஸ் எனும் திட்டத்தின் கீழ் 18 விண்வெளி வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்துள்ளது. தற்பொழுது இது குறித்த பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் 9 ஆண் வீரர்களும் 9 பெண் வீராங்கனைகளும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த வீரர்கள் அடங்கிய குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜா சாரி என்ற அமெரிக்க விமானப்படை அதிகாரியும் இடம்படித்துள்ளது மகிழ்ச்சியான செய்தி.
1977ஆம் ஆண்டு பிறந்த ராஜா சரி ஹைதராபாத் நகரை சேர்ந்த பொறியாளர் ஆகிய ஸ்ரீனிவாஸ் வி சாரி அவர்களின் மகன். விண்வெளி படிப்புக்காக அமெரிக்காவில் குடிபெயர்ந்தார். ராஜா சாரி பயிற்சி பைலட் கல்லூரியில் விமானியாக தகுதி பெற்ற இவர், விண்வெளி துறையில் முதுகலை பட்டமும் பெற்றவர். இந்நிலையில் இந்திய வம்சா வழியாக இருந்தாலும் அமெரிக்காவில் இத்தனை ஆண்டுகாலமாக விண்வெளி அதிகாரியாக பதவி வகித்த இவர் நிலவுக்கு செல்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாக உள்ளது. இவருடன் மேலும் 18 வீரர்களும் செல்ல உள்ளனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…