பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்ததாக தயாராகி வரும் திரைப்படம் இந்தியன்-2. இந்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கிறார். மேலும், சித்தார்த், பிரிய பவனிசங்கர், ரகுள் பிரீத் சிங், விவேக், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
இப்படத்தின் சூட்டிங் வெளிநாடுகளில் படமாக்க படக்குழு திட்டமிட்டு அதற்காக சென்ற ஆண்டு பல நாடுகளுக்கு லொகேஷன் பார்க்க சென்றார்கள். ஆனால், தற்போது இந்த படம் முழுக்க முழுக்க இந்தியாவில் படமாக்கப்பட உள்ளதாம். இதற்கு காரணம் உலகநாயகன் கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்து அதில் பிசியாக இருப்பதாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் வாரந்தோறும் சனி, ஞாயிறு கிழமைகளில் நடைபெறுவதால் அதற்கான நேரம் ஒதுக்க வேண்டிய காரணத்தாலும், கமல்ஹாசனால் இந்தியா முழுவதும்,ஏன் தமிழ் நாட்டிற்குள்ளேயே படப்பிடிப்பு நடத்த உலகநாயகன் தரப்பில் கூறியுள்ளார் என தெரிகிறது.
அதனால் பிக்பாஸ் ஷூட்டிங் நடைபெறும் ஈவிபி பிலிம் சிட்டி அருகில், பூந்தமல்லியில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் செட் போட்டு இந்தியன் -2 படமாக்கப்பட்டு வருகிறதாம். மேலும் தற்போது படக்குழு ராஜமுந்திரி செல்ல உள்ளதாம். அங்கு ஐந்து நாட்கள் ஷூட் செய்து, சனி, ஞாயிறு கிழமைகளில் மீண்டும் உலக நாயகன் கமலஹாசன் பிக்பாஸ் ஷூட்டிங்கிற்கு வந்து விடுவாராம்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…