தீவிர உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்க உள்ள உலகநாயகன்! இந்தியன்-2 அசத்தல் அப்டேட்!

Default Image
  • உலகநாயகன் கமல்ஹாசன் – பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. 
  • இந்த படத்தில் உள்ள சில காட்சிகளுக்காக உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்து உடல் எடையை கமல்ஹாசன் குறைக்க உள்ளாராம்.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் திரைப்படம் இந்தியன்-2. இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த பிரமாண்ட படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானிசங்கர் என பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் ஷூட்டிங்கில் இருந்து சில மாதம் ஓய்வில் இருக்கிறார். ஆபரேஷன் வேலைகள் முடிந்து தற்போது தீவிர உணவு கட்டுப்பாட்டில் உலகநாயகன் கமல்ஹாசன் இருக்கிறாராம். அதாவது. இப்படத்தில் கமல்ஹாசனுக்கு இளமைக்கால தோற்றம் ( சுதந்திர போராட்ட காலம் ) இருக்கிறதாம். அதற்காக தற்போது தீவிரமாக தயாராகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்