உலகநாயகன் கமலஹாசனே இல்லாமல் வேகமாக வளர்ந்து வரும் இந்தியன் 2!

Default Image
  • பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் – உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் இந்தியன் -2. 
  • கமல்ஹாசனுக்கு தற்போது அறுவை சிகிச்சை முடிந்துள்ளதால் அவர் ஓய்வில் இருக்கிறார். அதனால் அவர் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. 

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவனி சங்கர், ராகுல் ப்ரீத் சிங் என பலர் நடித்து வருகின்றனர்.

அண்மையில் கமல்ஹாசன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவரது காலில் விக்கப்பட்டிற்குந்த உலோக தகடு அகற்றப்பட்டது. இதனால் அவர் தற்போது மருத்துவ ஓய்வில் உள்ளார். அவர் பிப்ரவரி மாதம் தான் இந்தியன் 2வில் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.

அதனால், அவர் இல்லாமல், தற்போது ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. பாபி சிம்ஹா, விவேக், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம். காஜல் ஜனவரி தொடங்கியதும் ஷூட்டிங்கில்  கலந்துகொள்ள உள்ளாராம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்