ஷங்கரின் இந்தியன் 2 எந்த சமூக பிரச்னையை பற்றி பேச போகிறது?!

Default Image

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்ததாக தயாராகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கிறார். சித்தார்த், சமுத்திரக்கனி, ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானிசங்கர், என பலர் நடிக்க உள்ளனர்.

இந்தியன் முதல் பாகம் லஞ்சம் ஊழல் பற்றிய அழுத்தமாக பேசியிருக்கும். அதிலும் தவறு செய்தான் என்பதற்காக தன் மகனையே கொன்றுவிடும் சமூக சீர்திருத்தவாதியாக  சேனாதிபதியாக கமல்ஹாசன் வாழ்ந்திருப்பார்.

இந்தியன் 2 படம் தற்போது இந்தியாவில் அதிகமாக நடைபெறும் பாலியல் குற்றங்களை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. ஆனால் இந்த விஷயத்தை ஷங்கர் – கமல் கூட்டணி பேசும் போது அது அழுத்தமாக பதியவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்