இந்தியன் 2: ஷங்கர் – லைகா இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி.!!
லைகா நிறுவனத்துடனான இந்தியன் – 2 படப்பிரச்சனையை பேசித்தீர்க்க முடியவில்லை என உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் ஷங்கர் பதில் அளித்துள்ளார்.
இந்தியன்-2 படப்பிடிப்பின் போது நடந்த விபத்தின் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின் இயக்குனர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும், அந்நியன் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது.
இதனையடுத்து, பிரபல பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம், இந்தியன்-2 படத்தை முடிக்காமல், வேறு படத்தை இயக்க தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவால் இந்தியன்-2 படபிரச்சனைக்கு தீர்வு காணமுடியாது. லைகா – ஷங்கர் கலந்துபேசி இந்தியன்-2 படப்பிரச்னைக்கு தீர்வு காணுங்கள் என நீதிமன்றம் அறிவுறுத்திருந்த நிலையில், உடன்பாடு இல்லை என்று இயக்குனர் ஷங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
லைகா நிறுவனத்துடனான இந்தியன் 2 படப்பிரச்சினையை பேசித்தீர்க்க முடியவில்லை. லைகா நிறுவனத்துடனான பிரச்சினைக்கு நீதிமன்றமே தீர்வு காணவேண்டும் என்று இயக்குநர் ஷங்கர் உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளார். ஷங்கர் விளக்கம் அளித்ததை தொடர்ந்து வாழ்கை உயர்நீதி மன்றம் தள்ளி வைத்தது.