இந்தியன்-2 பட நடிகருக்கு ஆண்குழந்தை!
நடிகர் பாபி சிம்ஹா பிரபலமான இந்திய நடிகராவார். இவர் தமிழ் சினிமாவில், ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா படத்தில் நடித்ததற்கு தேசிய விருதும் கிடைத்தது.
இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் உருவாகும், இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த 2016-ம் ஆண்டு ரேஷ்மி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து, இவர்களுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதாம். தாயும், சேயும் நலமாக உள்ளதாக கூறப்படுகிறது.