19வது ஆசிய விளையாட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து வரும்நிலையில், இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு பதக்கங்களை குவித்து வருகின்றனர். ஆசிய விளையாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு 100 பதக்கங்களை கடந்து இந்தியா சாதனை புரிந்துள்ளது. இந்த நிலையில், தற்போது ஆசிய விளையாட்டு செஸ் போட்டியில் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவிலும் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளது இந்தியா.
அதன்படி, பிலிப்பைன்ஸ்க்கு எதிரான போட்டியில் 3.5 – 0.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்று வெள்ளியை வென்றது அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் குஜராத்தி மற்றும் ஹரிகிருஷ்ணா பெண்டாலா அடங்கிய இந்திய அணி.
இதுபோன்று, பெண்கள் பிரிவில் ஹரிகா துரோணவல்லி, கோனேரு ஹம்பி, ஆர்.வைஷாலி, வந்திகா அகர்வால் மற்றும் சவிதா ஸ்ரீ ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றது. ஆசிய விளையாட்டு செஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் ஈரான் முதலிடத்திலும், பெண்கள் பிரிவில் சீனா தங்கம் வென்றன என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…