ஆசிய விளையாட்டு செஸ் போட்டியில் 2 வெள்ளி பதக்கம் வென்றது இந்தியா!

indian chess team

19வது ஆசிய விளையாட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து வரும்நிலையில், இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு பதக்கங்களை குவித்து வருகின்றனர். ஆசிய விளையாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு 100 பதக்கங்களை கடந்து இந்தியா சாதனை புரிந்துள்ளது. இந்த நிலையில், தற்போது ஆசிய விளையாட்டு செஸ் போட்டியில் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவிலும் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளது இந்தியா.

அதன்படி, பிலிப்பைன்ஸ்க்கு எதிரான போட்டியில் 3.5 – 0.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்று வெள்ளியை வென்றது அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் குஜராத்தி மற்றும் ஹரிகிருஷ்ணா பெண்டாலா அடங்கிய இந்திய அணி.

இதுபோன்று, பெண்கள் பிரிவில் ஹரிகா துரோணவல்லி, கோனேரு ஹம்பி, ஆர்.வைஷாலி, வந்திகா அகர்வால் மற்றும் சவிதா ஸ்ரீ ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றது. ஆசிய விளையாட்டு செஸ் போட்டியில்  ஆடவர் பிரிவில் ஈரான் முதலிடத்திலும், பெண்கள் பிரிவில் சீனா தங்கம் வென்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்