தென்கொரியாவை திணற விட்ட இந்தியா..!அபார ஆட்டம்
இந்தியா மகளிர் ஹாக்கி அணியானது தென்கொரிவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
இந்திய மகளிர் ஹாக்கி அணியானது தென்கொரியாவில் மூன்று போட்டிகள் அடங்கிய இருதரப்பு மகளிர் ஹாக்கி போட்டிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.இதற்கான முதல் நாள் மற்றும் தொடக்க போட்டியானது நடைபெற்றது .அதில் இரு அணிகளும் மோதின.
பரப்பாக நடந்த ஆட்டத்தில் முதல் பத்து நிமிடத்தில் இந்தியாவின் இளம் வீராங்கனை லால்ரெம்சியாமி ஒரு கோல் அடித்தார் இதனால் அணியானது முன்னிலை பெற்றது. இதில் இதற்கு முன் இந்தியாவிற்கு வழங்கப்பட்ட பெனால்ட்டி வாய்ப்பை தவறவிட்டது இந்தியா.
ஆட்டம் அனல் பறக்கவே மீண்டும் ஒரு கோலை 40 வது நிமிடத்தில் இந்தியாவின் நவ்னீத் கவுர் அடிக்கவே இந்தியா 2-0 என்று முன்னிலை வகித்தது.ஒரு கோல் கூட அடிக்காத தென்கொரியாவிற்கு இந்தியாவின் ஆட்டம் நெருக்கடியாக அமைந்தது.
போட்டியை நடத்தும் தென்கொரியாவிற்கு 5 பெனால்டி வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. கொடுத்த பெனால்டியை கோலாக மாற்ற முயற்சித்த தென்கொரியாவின் முயற்சியை இந்தியாவின் கோல்கீப்பரான சவீதா முறியடித்தார்.இதில் அவருடைய அனுபவம் அவருக்கு கை கொடுத்தது.
ஆனால் தென்கொரியா இதில் ஒரு வாய்ப்பினை வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி ஒரு கோல் அடித்தது.இதனால் இந்தியாவின் வெற்றி உறுதியானது.இந்தியா தொடக்க போட்டியில் 2-1 என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.மேலும் இரு அணிகளுக்கான இரண்டாவது போட்டி புதன்கிழமை நடைபெற உள்ளது