கோலியின் படை வெற்றியுடன் தொடங்குமா ?ஒரு நாள் தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பிடிக்குமா?

Default Image
இந்திய அணி தற்போது நடந்த கடைசி டெஸ்டில் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது.இந்நிலையில் இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கிடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி வருகின்ற வியாழக்கிழமை தொடக்கம்.
Image result for kohli & co in south africa
தென் ஆப்பிரிக்கா பயணம் சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்று இந்திய அணி இழந்துள்ள நிலையில், அடுத்து ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. . 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் டர்பன் நகரில் வரும் வியாழக்கிழமை தொடங்குகிறது.
இந்த தொடரை 4-2 என்று இந்திய அணி கைப்பற்றினாலோ, அல்லது அதற்கும் மேலாக 5-1, 6-0 என்ற கணக்கில் தொடரை வென்றாலோ ஐ.சிசி தரவரிசை பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க முடியும்.
ஆனால், தற்போது முதலிடத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்க அணி தனது இடத்தை தக்கவைக்க இந்த தொடரை சமன் செய்தாலே போதுமானது.
அதேசமயம், இந்த ஒருநாள் தொடரை இந்திய அணி இழக்கும் பட்சத்தில், அதாவது தொடரை 5-1 என்று தென் ஆப்பிரிக்கா கைப்பற்றினால், தரவரிசையில் இங்கிலாந்துக்கு அடுத்ததாக 3-வது இடத்துக்கு இந்திய அணி தள்ளப்படும்.
வீரர்களுக்கான ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் விராத் கோலி 876 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார். தென் ஆப்பிரிக்க வீரர் டீ வில்லியர்ஸ் 872 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் கோலியை நெருங்கி வருகிறார்.
அதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 823 புள்ளிகளுடன் 3-ம் இடத்திலும், ரோகித் ச்ரமா 816 புள்ளிகளுடன் 4-ம் இடத்திலும், பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் 813 புள்ளிகளுடன் 5-ம் இடத்திலும் உள்ளனர். மகேந்திர சிங் தோனி சரிந்து 13 இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார், சிகர்
பந்துவீச்சில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா 728 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். முதலிடத்தில் நியூசிலாந்து வீரர் டிரன்ட் போல்ட் 729 புள்ளிகளுடனும், தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் 743 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும் உள்ளனர். இடது கை சுழற்பந்துவீச்சாளர் அக்ஸர் படேல் 643 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் உள்ளார். ஆல்ரவுண்டர்கள் பிரிவில் எந்த இந்திய வீரரும் முதல் 10 இடங்களில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள் ….

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்