பாக்., ஒப்புதல்! இந்திய வீரர்கள் எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தான் முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தியது உண்மை …..
இந்திய வீரர்கள் எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தான் முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தியதையடுத்து இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.
இந்திய வீரர்கள் நடத்திய தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.
இத்தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா திருப்பி தாக்கியுள்ளது. இத்தாக்குதல் காரணமாக எல்லையில் பலமணி நேரம் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது போன்ற பதிலுக்கு பதில் தாக்குதல் தொடரும் என்று இந்தியா எச்சரிக்கை விடுத்ததை அடுத்து பாகிஸ்தான் ராணுவம் சமாதானப் பேச்சுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
source: dinasuvadu.com