இந்தியா – சீனா பிரச்சனையில் இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்க ராணுவம் வலுவாக நிற்கும் – வெள்ளை மாளிகை அதிகாரி

இந்தியா – சீனா பிரச்சனையில் இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்க ராணுவம் வலுவாக நிற்கும்.
கடந்த சில நாட்காளாகவே, இந்தியா – சீனா எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இரண்டு நாடுகளுக்கு இடையேயும் நடைப்பெற்ற தாக்குதலில், இராணுவவீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை தகராறு தொடர்பாக வெள்ளை மாளிகையின் உயர்மட்ட உதவியாளர் ஒருவர் பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், மிக சக்திவாய்ந்த, மேலாதிக்க சக்தியாக சீனாவையோ அல்லது வேறு யாரையோ நாங்கள் ஆதரிக்கப் போவதில்லை என்றும், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதலில், அமெரிக்க ராணுவம், இந்தியாவின் பாக்கம் வலுவாக நிற்கும் என தெரிவித்துள்ளார்.