உலகோப்பையில் ஆஸ்திரேலியா எதிரான போட்டியில் முதலிடம் வகிக்கும் இந்தியா!

Default Image

நேற்று நடந்த போட்டியில் இந்திய அணியும் , ஆஸ்திரேலியா அணியும் மோதியது. இப்போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
களமிறங்கிய இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 352 ரன்கள் எடுத்தது. பிறகு  களமிறங்கிய ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டை இழந்து  50 ஓவரில் 316 ரன்கள் எடுத்து 36 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் உலக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் ஆன ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இதுவரை அதிக ரன்கள் அடித்த அணிகளில் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது.நேற்றைய போட்டியில் இந்திய அணி 352 ரன்கள் குவித்து இந்த சாதனையை படைத்தது உள்ளது.
இதற்கு முன் 2015-ம் ஆண்டு உலக்கோப்பையில் இலங்கை அணி 312 ரன்கள் அடித்தது தான் அதிக ரன்னாக இருந்தது.நேற்றைய போட்டியில் இந்திய அணி அதை முறியடித்தது.
352/5 – INDIA, oval ,2019
312 – Sri Lanka, Sydney, 2015
294 – South Africa, Basseterre, 2007

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்