இன்றும் விக்கெட் வேட்டையில் இந்தியா! 240 ரன்கள் இலக்காக வைத்த நியூஸிலாந்து !

Default Image

நேற்றைய முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் , நியூஸிலாந்து அணியும் மோதியது .இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக  மார்ட்டின் குப்டில் ,ஹென்ரி நிக்கோல்ஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே பும்ரா வீசிய வேக பந்தில் மார்ட்டின் குப்டில் 1 ரன்னில் வெளியேறினர்.

பின்னர் இறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் 67 , ராஸ் டெய்லர் 67 ரன்கள் அடித்ததன் மூலம் நியூஸிலாந்து அணி 46.1 ஓவரில்  211 ரன்கள் அடித்து 5 விக்கெட்டை பறிகொடுத்து விளையாடி கொண்டு இருந்த  போது மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனால் மழை தொடர்ந்து  பெய்ததால் போட்டி நிறுத்தப்பட்டு  மீண்டும் இன்று தொடக்கி உள்ளது.

இன்று மீண்டும் ரோஸ் டெய்லர், டாம் லாதம் இருவரும் களமிங்கினர். ரோஸ் டெய்லர் அடித்து விளையாட முயன்ற போது  74 ரன்னில் ஜடேஜா ரன் அவுட் செய்தார். பின்னர் இறங்கிய மாட் ஹென்றி பந்தை தூக்கி அடித்தார்.அப்போது பவுண்டரி லைன்னில் நின்ற கேப்டன் கோலி கேட்ச் பிடித்ததன் மூலம் மாட் ஹென்றி 1 ரன்னில் வெளியேறினர்.

இறுதியாக நியூஸிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 239 ரன்கள் அடித்தனர்.இந்திய அணி பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார்  3 விக்கெட்டை பறித்தார்.240 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்