“2027 க்குள் பெட்ரோல் மூலம் இயங்கும் இரு சக்கர வாகன விற்பனையை நிறுத்த வேண்டும்” – ஹீரோ எலக்ட்ரிக் ..!

Default Image

2027 க்குள் பெட்ரோல் மூலம் இயங்கும் இரு சக்கர வாகன விற்பனையை இந்தியா நிறுத்த வேண்டும் என்று ஹீரோ எலக்ட்ரிக் தெரிவித்துள்ளது.

மின்சார வாகனங்கள் போன்ற சுத்தமான ஆற்றல் வாகனங்களை மாற்றுவதை அதிகப்படுத்த 2027 ஆம் ஆண்டுக்குள் பெட்ரோல் எரிபொருளால் இயங்கும் இரு சக்கர வாகனங்களின் விற்பனையை நாடு முழுவதும் நிறுத்த வேண்டும் என்று மின்சார-ஸ்கூட்டர் தயாரிப்பாளர் ஹீரோ எலக்ட்ரிக் அழைப்பு விடுத்துள்ளது.

மாற்று எரிசக்தி வாகனங்களை ஏற்றுக்கொள்வதில் சீனா போன்ற பிற நாடுகளை விட இந்தியா பின்தங்கியுள்ளது என்று நிறுவனத்தின் MD நவீன் முன்ஜால் ஒரு பேட்டியில் கூறினார்.மேலும்,அவர் கூறுகையில்:”மின்சார வாகனங்களுக்கான இந்தியாவின் மாற்றம் அதிக விலை மற்றும் போதிய சார்ஜிங் உள்கட்டமைப்பால் தடைபட்டுள்ளது.

குறிப்பாக,ப்ளூம்பெர்க் என்இஎஃப் படி, உலகின் மின்சார ஸ்கூட்டர் விற்பனையில் சீனாவின் பங்கு 97% என்றாலும், இந்தியாவில், இ-ஸ்கூட்டர்களின் பங்கு மொத்தத்தில் 1% மட்டுமே.

மேலும்,பெட்ரோல் மூலம் இயங்கும் இரு சக்கர வாகனங்கள் 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி நாட்டின் சாலைகளில் உள்ள 296 மில்லியன் வாகனங்களில் 75% ஆகும்.இதனால்,பெட்ரோலால் இயங்கும் இரு சக்கர வாகனங்களை சுத்தமான ஆற்றலுடன் மாற்ற வேண்டியதன் அவசியம் உள்ளது.

அதன்படி,2007 இல் நிறுவப்பட்ட, ஹீரோ எலக்ட்ரிக் அதன் திறனை ஆண்டுக்கு 500,000 யூனிட்டுகளுக்கு ஐந்து மடங்கு அதிகரிக்க ஏழு பில்லியன் ரூபாய்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. மின்சார ஸ்கூட்டர் நிறுவனம் சுற்றுச்சூழலை மேம்படுத்த நாடு முழுவதும் சார்ஜிங் நிலையங்களை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளது.

மேலும், ஹீரோ எலக்ட்ரிக் தனது சர்வதேச இருப்பை ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் விரிவுபடுத்துகிறது.அதிக போட்டி வரும்போது, சந்தையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது, அதைப் பயன்படுத்திக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று  கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 18042025
SRH Lose MI in ipl 2024 april 17
ADMK Chief secretary Edappadi Palanisamy
Nainar Nagendran - Annamalai
Mumbai Indians
SRHvsMI