இந்தியா ஒருதலைப்பட்சமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் – சீன வெளியுறவுத்துறை..!
லடாக் எல்லையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சீனா, இந்தியா இராணுவ வீரர்கள் இடையே நிகழ்ந்த மோதலுக்கு பின் இரு நாடுகள் இடையே பதற்றம் இருந்து வருகிறது. இதனால், இரு நாடும் தங்கள் எல்லையில் படைகள் குவித்துள்ளன. இதற்கிடையில் இதுகுறித்து ராணுவ மட்ட பேச்சு வார்த்தை இதுவரை 9 முறை நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், சிக்கிம் எல்லையில் சீன வீரர்கள் ஊடுருவல் முயற்சியை இந்திய வீரர்கள் முறியடித்தனர். இதுகுறித்து விளக்கம் அளித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்திய எல்லையில் அமைதியை நிலைநாட்ட சீன ராணுவத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எல்லையில் இந்தியா ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். அமைதியை நிலைநாட்டு இந்தியா நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.