இந்தியா பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்….இம்ரான்கான் அழைப்பு…!!
- பாகிஸ்தான் இந்திய விமானப்படையை சேர்ந்தவரை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார.
- இந்தியா பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தியது. சுமார் 80கி.மீ வரை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வந்த முகாம்கள் இந்தியாவின் தாக்குதலில் தரை மட்டமாக்கப்பட்டது.
இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகின்றது.ஆனால் இந்தியா தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களை தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டு இருக்கின்றது.மேலும் தற்போது மத்திய அரசு இந்தியா பயங்கரவாதிகள் முகாம் மீது சக்திவாய்ந்த 6 குண்டுகளை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுக்கு பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றது .அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் போர் விமானம் இன்று இந்தியாவை தாக்க வந்த போது இந்திய விமானப் படை அதை சுட்டு வீழ்த்தியது. மேலும் பாகிஸ்தான் விமானப் படையை தாக்க முற்பட்ட இந்திய விமானம் ஓன்று கீழே விழுந்து விமானியை பாகிஸ்தான் கைது செய்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இஸ்லமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசியதில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த அபிநந்தன் என்பவரை நாங்கள் கைது செய்துள்ளோம் , மற்றொரு ராணுவ வீரர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால், அவர் பற்றிய முழுமையான விபரம் தெரியவில்லை என்றுதெரிவித்தார்.மேலும் அவர் புல்வாமா தாக்குதல் மிகுந்த வேதனை அளிப்பதாகவும், அதை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்தியாவிற்கு பாகிஸ்தான் முழு ஒத்துழைப்பு அளிக்கும் பேச்சுவார்த்தை மூலம் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண பாகிஸ்தான் தயாராக இருக்கின்றது. இந்தியா பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று இம்ரான்கான் அழைப்பு விடுத்தார்.