ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்களிக்க மறுத்த இந்தியா!

Default Image

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க மறுத்துள்ளது.

ரஷ்யா – உக்ரைன் போர்

கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யா உக்ரைனில் பல முக்கிய நகரங்களை கைப்பற்றி உள்ளது. மேலும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உக்ரேனில் இருந்து அகதிகளாக பிற நாடுகளுக்கு சென்றுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

தொடரும் தாக்குதல் 

இந்த தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில் பலர் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும் ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்திய பாடில்லை. உலகநாடுகள் ரஷ்யாவிடம் தாக்குதலை நிறுத்துமாறு அறிவுறுத்தி வரும் நிலையில் அதற்கு செவி சாய்க்காமல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

ரஷ்யாவின் தீர்மானம்:

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க மறுத்துள்ளது.உக்ரைன் மீதான தாக்குதல்,ஆக்கிரமிப்பைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லாத ரஷ்ய தீர்மானம்,உக்ரைனுக்கு வெளியே உள்ள இடங்களுக்கு பாதுகாப்பான மற்றும் தடையின்றி,பாகுபாடின்றி வெளிநாட்டு குடிமக்கள் உட்பட, பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் ஊனமுற்ற நபர்களின் குறிப்பிட்ட தேவைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு மனிதாபிமான உதவிகளை அணுகுவதற்கு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டது.

இந்தியா வாக்களிக்க மறுப்பு:

உக்ரைன் மனித உரிமை விவகாரம் குறித்த ரஷ்யாவின் இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது.உறுப்பினர்களாக உள்ள 15 நாடுகளில் தீர்மானத்துக்கு ஆதரவாக ரஷ்யா,சீனா மட்டுமே வாக்களித்துள்ளன.ஆனால்,இந்தியா,ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 13 நாடுகள் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானம் மீது வாக்களிக்காமல் நடுநிலை வகித்துள்ளன.

ரஷ்யா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்குப் பிறகு மற்ற கவுன்சில் உறுப்பினர்கள் அறிக்கைகள் வெளியிட்டாலும்,இந்தியா எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.இதற்கு  முன்னதாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடர்பான தீர்மானங்களுக்கு பாதுகாப்பு கவுன்சிலில் இரண்டு முறையும்,ஐநா பொதுச் சபையில் ஒரு முறையும் இந்தியா இதற்கு முன்பு வாக்களிக்கவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்