எல்லை பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார் – அதிபர் டிரம்ப்.!

Default Image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா இடையே நடந்து வரும் எல்லை பிரச்சனையை “மிகவும் மோசமான நிலைமை” என்று அழைத்தார்.  மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையில் மத்தியஸ்தம் (உதவி ) செய்ய தயாராக இருக்கிறோம். இது குறித்து நாங்கள் இரு நாடுகளுடனும் பேசுகிறோம்” என்று டிரம்ப் கூறினார்.

சீனா, இந்தியாவிடம் அத்துமீறுக்கிறதா..? என்று கேட்டதற்கு, அவர் பதிலளித்த டிரம்ப், இல்லை என்று நம்புகிறேன், ஆனால் நிறைய பேர் புரிந்துகொள்வதை விட சீனா அதை விட வலுவாக செல்கிறார்கள் என கூறினார். சீனா வைரஸால் என்ன நடந்தது என்று பாருங்கள், அவர்கள் 188 நாடுகளுக்கு என்ன செய்தார்கள் என்று பாருங்கள் என்று அவர் கூறினார்.

இதற்கு முன் ஒரு முறை டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக கூறினார். அப்போது, அப்போது மத்தியஸ்தம் செய்ய  வேண்டிய அவசியமில்லை என்று கூறி இந்தியாவும், சீனாவும் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.

 சீனாவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான பதட்டமான சூழல் இருந்தாலும் அவ்வப்போது இரு நாடுகளும் இராணுவ மட்டங்களில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அமைச்சரவைக் கூட்டத்திற்கு சென்றுள்ள முன்னிட்டு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

நேற்று  சீன பாதுகாப்பு அமைச்சர் வீ ஃபெங் உடன் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு  2 மணி 20 நிமிடங்கள் நடைபெற்றது. கால்வான் பள்ளத்தாக்கு, மற்றும் கொங்ரங் நாலா உள்ளிட்ட பல பகுதிகளில் சீன இராணுவம் அத்துமீறல்கள் தொடர்பாக இந்தியாவும், சீனாவும் கடந்த மே மாதங்களில் மோதலில் ஈடுபட்டுள்ளன.

கால்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்