முதல் இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியை பின்னுக்கு தள்ளிய இந்தியா !
உலகக்கோப்பை போட்டி தற்போது வெறுவெறுப்பாக இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் பந்து அணிகள் விளையாடி வருகிறது.இப்போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் உள்ள அணிகள் மட்டுமே அரைஇறுதிக்கு செல்ல வாய்ப்பை பெரும் அதனால் அரையிறுதிக்கு செல்ல இங்கிலாந்து ,பங்களாதேஷ் ,பாகிஸ்தான் அணிகள் போட்டி போட்டு வருகின்றது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணியும் ,பங்களாதேஷ் அணியும் மோதியது. இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 92 பந்தில் 104 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் ரோஹித் சர்மா அடித்த நான்காவது சதமாகும். இந்நிலையில் உலகக்கோப்பையில் அதிக சதம் அடித்த அணிகளில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் இருந்தது.தற்போது நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா சதம் அடித்ததன் மூலம் உலகக்கோப்பையில் 30 சதத்தை அடித்து முதல் இடத்தில் உள்ளது.
இப்போட்டியில் இந்திய அணி ,பங்களாதேஷ் அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்தியா – 30
ஆஸ்திரேலியா – 30
இலங்கை – 24
வெஸ்ட இண்டீஸ் – 19