பெய்ரூட் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிய இந்தியா!
பெய்ரூட் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிய இந்தியா.
லெபனானின் பெய்ரூட் துறைமுக நகரத்தில் ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பால், அப்பகுதியே உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த சம்பவத்தில் குறைந்தது 135 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 5,000 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், பெய்ரூட்டில் ஏற்பட்ட பேரழிடுவையடுத்து, மருத்துவ மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட 58 மெட்ரிக் டன் அவசரகால மனிதாபிமான உதவிகளை, இந்தியா லெபனானுக்கு வெள்ளிக்கிழமை வழங்கியது.
இந்த நிவாரண பொருட்களில், கோதுமை மாவு, சர்க்கரை மற்றும் பருப்பு வகைகள் மற்றும் போர்வைகள் மற்றும் தூக்க பாய்கள் போன்ற பொருட்கள் உள்ளன.