ஆக்கிரமிப்பு காஸ்மீரில் தீவிரவாத பயிற்சி முகாம்களை எல்லாம் மூட பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா ஜ.நாவில் உறுதிப்பட வலியுறுத்தி உள்ளது.
ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் இந்தியா சார்பில் பிரதிநிதி பவன்பாதே பங்கேற்றார்.
இந்நிலையில் அண்மையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக எல்லாம் பவன்பாதே மறுத்தார். இந்தியாவில் மனித உரிமை மீறல் ஏதும் நடைபெற வில்லை என்றும் சிறுபான்மையின சமூகத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறிய அவர் மாற்று மதத்தை சேர்ந்த சிறுபான்மையின மக்கள் தான் பாகிஸ்தானில் மிகக் கொடூரமாக கொல்லப்படுவதும், சிறுமிகள் கற்பழிப்பு, மேலும் மாற்று சமூகத்தினர் வலுக்கட்டயமாக மதமற்றப்படுவதையும் உலகமே அறியும் என்று பவன்பாதே குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத பயிற்சி முகாம்களை பாகிஸ்தான் அமைத்து இந்திய நிலைகளை குறிவைத்து தாக்கும் சம்பவங்கள் நீடித்து வருகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். மேலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஊக்குவித்து கொண்டே வருவதாகவும் பவன்பாதே குறிப்பிட்டார். ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் ஆகையினால் ஆக்கிரமிப்பு காஸ்மீரில் தீவிரவாத பயிற்சி முகாம்களை எல்லாம் மூட பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஐ.நாவில் இந்திய பிரதிநிதி பவன்பாதே பாகிஸ்தானை நோக்கியும் கடுமையாக குறிப்பிட்டார்.
இந்நிலையில் அண்மைக்காலமாக இராணுவ செய்திகள் எல்லாம் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதே அடுத்தக்கட்ட இலட்சியமாக கொண்டுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த இரண்டு வாரமாக புதுப்புது உச்சம் தொட்டு வரும் ஆபரண தங்கத்தின் விலை உயர்வுக்கு அமெரிக்கா-சீனா, கனடா…
பஞ்சாப் : பாலிவுட் நடிகர் சோனு சூட் எப்போதும் தனது தாராள மனசுக்கு பெயர் பெற்றவர். அவர் பெரும்பாலும் தேவைப்படுபவர்களுக்கு…
சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள…
சென்னன: நடிகர் அஜித் நடிப்பில் கடசியாக வெளியான துணிவு படத்துக்கு பின், கடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்ட…
டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…
நெல்லை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு களஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு…