பயிற்சி முகாம்கள்! ஐ.நாவில் போட்டுடைத்த இந்தியா!! அடுத்தக்குறி ஆக்கிரமிப்பு காஷ்மீர்?

Default Image

ஆக்கிரமிப்பு காஸ்மீரில் தீவிரவாத பயிற்சி முகாம்களை எல்லாம் மூட பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா ஜ.நாவில் உறுதிப்பட வலியுறுத்தி உள்ளது.

ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் இந்தியா சார்பில் பிரதிநிதி பவன்பாதே பங்கேற்றார்.

இந்நிலையில் அண்மையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக எல்லாம் பவன்பாதே மறுத்தார். இந்தியாவில் மனித உரிமை மீறல் ஏதும் நடைபெற வில்லை என்றும் சிறுபான்மையின சமூகத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று  கூறிய அவர் மாற்று மதத்தை சேர்ந்த சிறுபான்மையின மக்கள் தான் பாகிஸ்தானில் மிகக் கொடூரமாக  கொல்லப்படுவதும், சிறுமிகள் கற்பழிப்பு, மேலும் மாற்று சமூகத்தினர் வலுக்கட்டயமாக மதமற்றப்படுவதையும் உலகமே அறியும் என்று பவன்பாதே குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத பயிற்சி முகாம்களை பாகிஸ்தான் அமைத்து இந்திய நிலைகளை குறிவைத்து தாக்கும் சம்பவங்கள் நீடித்து வருகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். மேலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஊக்குவித்து கொண்டே வருவதாகவும் பவன்பாதே குறிப்பிட்டார். ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் ஆகையினால் ஆக்கிரமிப்பு காஸ்மீரில் தீவிரவாத பயிற்சி முகாம்களை எல்லாம் மூட பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று  ஐ.நாவில் இந்திய பிரதிநிதி பவன்பாதே   பாகிஸ்தானை நோக்கியும் கடுமையாக குறிப்பிட்டார்.

இந்நிலையில் அண்மைக்காலமாக இராணுவ செய்திகள் எல்லாம் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதே அடுத்தக்கட்ட இலட்சியமாக கொண்டுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்