இந்தியாவின் ஊது குழல் அமெரிக்கா! பாகிஸ்தான் விமர்சனம்………
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜனவரி 1 ல் அவரது டிவிட்டர் பக்கத்தில், “கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா 33 பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது. அதற்குப் பதிலாக பாகிஸ்தான் வெறும் பொய்களை மட்டுமே திரும்பக் கொடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக இஸ்லாமாபாத் இருக்கிறது” என குறிப்பிட்டு பாகிஸ்தானைக் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், பாகிஸ்தானுக்கு இந்த ஆண்டு வழங்கப்படவிருந்த நிதியை நிறுத்திவைப்பதாக அமெரிக்க அரசு அறிவித்ததோடு பாகிஸ்தான் இனிமேலாவது திருந்த வேண்டும் என்றவர்கள் பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த பாதுகாப்பு உபகரணங்களை நிறுத்துவதாகவும் அதிரடியாக அறிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த இருதினங்களுக்கு முன்பு சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவு கரம் நீட்டியது, சீனா பாகிஸ்தான் குறித்து கூறுகையில் : பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக தியாகப்போர் புரிந்துவருகிறது என அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்து சீன அரசு பாகிஸ்தானை புகழ்ந்தது. இதுவரை அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு கருத்து தெரிவிக்காதிருந்த பாகிஸ்தான் அதிபர் ட்ரம்ப் கூறிய குற்றச்சாட்டை விவாதிக்க தேசிய பாதுகாப்புக்குழு கூட்டத்தை நேற்று இஸ்லாமாபாத்தில் கூட்டியது. அப்போது அமெரிக்கா நிதியுதவியை நிறுத்தியதற்கு இந்தியாவே காரணம் என்று இந்தக் கூட்டத்தில் விவாதித்துள்ளனர். மேலும் இந்தக் கூட்டம் முடிந்ததும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது : இந்தியாவின் ஊதுகுழலாக அமெரிக்கா செயல்படுகிறது. இந்தியாவும் அமெரிக்காவும் நட்புறவுடன் உள்ளது. இதனால் இந்தியாவின் பொய்கள் மற்றும் வஞ்சக கருத்துகளைத் தற்போது அமெரிக்கா வெளிப்படுத்துகிறது” என குற்றம்சாட்டியுள்ளார்.
source: dinasuvadu.com