உலக அளவில் முன்னணி தடுப்பூசி தயாரிப்பாளராக இந்தியாவை உலகம் எதிர்நோக்கியுள்ளது என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரபல ஊடகத்தில் பேசிய அவர், இந்தியா ஒரு முன்னணி தடுப்பூசி உற்பத்தியாளர் என்றும் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பதால் எங்களுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு தேவை என்றும் தெரிவித்துள்ளார். வளரும் நாடுகளுக்கு கிடைக்கக்கூடிய சில திறன்களை உலகம் இந்தியாவைப் பார்க்கிறது. அஸ்ட்ராசெனெகா, ஆக்ஸ்போர்டு, நோவாவாக்ஸ் அல்லது ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து கொரோனா தடுப்பு மருந்து வந்தாலும் கூட, ஒரு தடுப்பூசி எடுத்து இந்தியாவில் தயாரிக்கும் யோசனையை தான் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், கொரோனா தடுப்பூசியை வெளியிடுவது வரும் ஆண்டில் பெரிய அளவில் நடக்கும் என்று கூறியுள்ளார். இந்தியாவில் இருந்து ஒரு தடுப்பூசியை எங்களால் முடிந்தவரை விரைவாகப் பெற விரும்புகிறோம். இது பயனுள்ள மற்றும் பாதுகாப்பானது என்பதை அறிந்தவுடன், இதற்கான வேலைகள் அடுத்த ஆண்டு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு முதல் காலாண்டில், பல தடுப்பூசி தன்னார்வலர்கள் இறுதி கட்டத்தில் இருப்பார்கள் என்று கூறிய அவர், நம்பிக்கையுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்தியாவில் 3 கொரோனா தடுப்பு மருந்துகளை தன்னார்வலர்களிடம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அஸ்ட்ராஜெனெகாவுடன் தயாரிக்கப்படும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி உட்பட சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் பல்வேறு நகரங்களில் சோதனைகளை நடத்தி வருகிறது. உலகின் மிகப்பெரிய தொண்டு நிறுவனங்களில் ஒன்றான பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, இந்த நோயைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில், தடுப்பூசிகளின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை துரிதப்படுத்த, சீரம் நிறுவனத்துடன் இந்த அறக்கட்டளை ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தியாவில் இரண்டு உள்நாட்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. பாரத் பயோடெக் தயாரிக்கும் கோவாக்சின் என்ற மருந்து, மற்றோன்று சைடஸ் காடிலா ஹெல்த்கேர் நிறுவனத்தில் தயாரிக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…